புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
2000 மெகாவாட் மின்சார வினியோக அமைப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்னழுத்த திட்டத்துக்கு தலைகீழ் மின் ஏலம்
Posted On:
17 APR 2020 6:53PM by PIB Chennai
மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய நீர்மின் உற்பத்திக் கழகம் (என்எச்பிசி), நாட்டின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமைக்கப்படக்கூடிய 2000 மெகாவாட் மின்சார வினியோக அமைப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்னழுத்த திட்டத்துக்கு 16ம் தேதி அன்று மின்னணு முறையில் ஏலத்தை நடத்தியது. தேசிய நீர்மின் உற்பத்திக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. ஏ.கே. சிங் மற்றும் இயக்குனர் (தொழில்நுட்பம்) திரு. ஒய்.கே. சௌபே ஆகியோரின் முன்னிலையில் இந்த ஏலம் நடைபெற்றது.
"ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.55/2.56 என்ற போட்டிக்குரிய விலையில், 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சார திறனுடைய திட்டத்தை செயல்படுத்தும் ஏலத்தை மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய நீர்மின் உற்பத்திக் கழகம் இறுதி செய்துள்ளது. பொது முடக்கத்தின்போது எங்கள் பங்குதாரர்களுடன் மெய் நிகர் தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு புதிய ஏலங்களை கொண்டு வந்தோம்," என்று மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர், திரு. ஆர்.கே. சிங், தனது சுட்டுரையில் தெரிவித்தார்.
3140 மெகாவாட் மதிப்பீட்டு திறனுடைய 7 ஏலதாரர்களுக்கு இடையே மின்னணு முறை ஏலம் நடந்தது. முதலில் மேற்கோள் காட்டப்பட்ட ஒர் யூனிட்டுக்கு ரூ.2.71 முதல் ரூ.2.78 வரை என்ற விலையில் இருந்து, குறைவான தலைகீழ் மின் ஏலத் தொகையான ஒர் யூனிட்டுக்கு ரூ.2.55 முதல் ரூ.2.56 வரை என்ற விலை, மொத்த ஒதுக்கீட்டு திறனான 2000 மெகாவாட்டுக்கு அடையப்பட்டது. கோவிட்-19 தொற்று காரணமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒட்டுமொத்த பொது முடக்கத்தின் போதும், இந்த தலைகீழ் மின்னணு முறை ஏலத்தை தேசிய நீர்மின் உற்பத்திக் கழகம் வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
***
(Release ID: 1615680)
Visitor Counter : 221