அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
                
                
                
                
                
                
                    
                    
                        நோய்க்கிருமிகளைத்  திறம்படக்  கண்டு  பிடிப்பதற்கான மலிவு விலைக்கருவியைக் அகர்கர் ஆராய்ச்சி நிறுவன  ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                19 APR 2020 2:13PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பாக்டீரியாவை விரைவாகக் கண்டுபிடிக்கும் அதிவுணர்வு மலிவு விலைக் கருவியை புனேயில் உள்ள, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் அகர்கர்
ஆராய்ச்சி நிறுவனம் உருவாகியுள்ளது. கையில் எடுத்துச் செல்லக்கூடிய
அளவில் உள்ள இந்தக் கருவி ஒரு மில்லி லிட்டர் அளவிலான மாதிரியில் இருந்து பத்து பாக்டீரியா செல்களே இருந்தாலும் கூட அவற்றை 30 நொடிகளில் கண்டுபிடிக்கக்
கூடியது. தற்போது ஆராய்ச்சியாளர்கள் எஸ்கரிஷியா கோலை, சால்மோனெல்லா, டைபிமூரியம் ஆகிய நுண்ணுயிரிகளைக் ஒரே சமயத்தில் கண்டுபிடிக்கும் முறையைக் காண நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சாதாரண நோய்களை ஏற்படுத்தும் எஸ்கரிஷியா கோலை, சால்மோனெல்லா, டைபிமூரியம் ஆகியவற்றை தனித்தனியாகவும் ஒரே சமயத்திலும் இந்த நிறுவனத்திலேயே தயாரிக்கப்பட்ட செயற்கை பெப்டைடு மூலம் கண்டுபிடிக்க இயலும். இந்த பெப்டைடுகள் கண்டறியும் தனிமமாகச் செயல்பட்டு குறிப்பிட்ட தன்மை
கண்டுபிடிப்பிற்கு வழிவகுக்கிறது. மேலும் இந்த பெப்டைடுகள் குறிப்பிட்ட
பாக்டீரியாவை மட்டுமே கண்டுபிடிக்கக் கூடியவை என்பதால் தவறான முடிவுகள் வெளிவர வாய்ப்பு மிக மிகக் குறைவே.
நுண்கிருமியை மோப்பம் பிடித்துக் காணும் இந்தக் கருவி மிகவும் மலிவானது.
இக்கருவியைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் எளிதில் கிடைக்கின்றன .
தற்போது எஸ்கரிஷியா கோலை, சால்மோனெல்லா, டைபிமூரியம் ஆகிய
நுண்ணுயிரிகளைக் ஒரே சமயத்தில் கண்டுபிடிக்கும் முறையில் ஈடுபட்டுள்ள
விஞ்ஞானிகள், லேம்ப் ( அதாவது வளையம் வழியிலான ஒரே வெப்பநிலை பெருக்கம் )
எனப்படும் ஒரு சோதனைக் குழாய் நுட்பத்தின் மூலம் டி என் ஏ- க்களை
உருப்பெருக்கிக் காண்கிறார்கள். சில நோய்தொற்றுக்களைக் கண்டுபிடிக்க இது
மலிவான மாற்றுமுறை ஆகும். இந்த ஆய்வுப்பணிக்கு இந்திய மருத்துவ
ஆராய்ச்சி சபை – (ICMR) , நிதி வழங்குகிறது.
இதுகுறித்த மேல் விவரங்களுக்கு புனே, அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின்  நானோ உயிரி அறிவியல் குழுவின் விஞ்ஞானி டாக்டர். தனஞ்ஜெய் போடாஸ் (dsbodas@aripune.org) 020-25325127) , அல்லது அதன் தற்காலிக இயக்குநர் டாக்டர். தாக்கேபல்கர் (director@aripune.org, pkdhakephalkar@aripune.org, 020-25325002)
ஆகியோரை அணுகலாம்.
                
                
                
                
                
                (Release ID: 1616359)
                Visitor Counter : 178