நிலக்கரி அமைச்சகம்

710 மெட்ரிக் டன்கள் நிலக்கரியை, கோல் இந்தியா லிமிடெட், இந்த நிதி ஆண்டில் உற்பத்தி செய்யும்: திரு. பிரஹ்லாத் ஜோஷி

प्रविष्टि तिथि: 23 APR 2020 2:30PM by PIB Chennai

கோல் இந்தியா லிமிடெட் 710 மெட்ரிக் டன்கள் நிலக்கரியை உற்பத்தி செய்யும். இந்த நிறுவனத்தின் நிலக்கரி வரத்து (off-take) இலக்கும் இந்த நிதி ஆண்டில் 710 மெட்ரிக் டன்களாக இருக்கும். அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை 22 ஏப்ரல் 2020 அன்று காணொளிக் காட்சி மூலம் ஆய்வு செய்யும் போது, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு. பிரஹ்லாத் ஜோஷி இந்த இலக்குகளை நிர்ணயித்தார்.

"கொரோனா வைரஸ் பொது முடக்கம் முடிந்தவுடன் நிலக்கரிக்கான தேவை அதிகரிக்கும். எனவே, 2023 - 24ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியன் டன்கள் நிலக்கரியை உற்பத்தி செய்யவேண்டிய இலக்கை அடைவதற்கு ஏதுவாக, உற்பத்தி மற்றும் வரத்து இலக்குகளை 710 மெட்ரிக் டன்களாக 2020 – 21ஆம் நிதி ஆண்டுக்கு வைத்துக் கொள்ளுமாறு கோல் இந்தியா லிமிடெட்டுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்," என்று திரு. பிரஹ்லாத் ஜோஷி கூறினார்.

***


(रिलीज़ आईडी: 1617467) आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada