எரிசக்தி அமைச்சகம்

மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் NHPC, ஆண்டு வட்டி 6.80 சதவீதம் கொண்ட கடன் பத்திரங்கள் மூலம் 750 கோடி ரூபாய் திரட்டியுள்ளது

प्रविष्टि तिथि: 23 APR 2020 5:24PM by PIB Chennai

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ( இந்தியஅரசுக்கு சொந்தமான) நிறுவனமான தேசிய நீர்மின்சக்தி நிறுவனம் (National Hydroelectric Power Corporation Limited - NHPC ) ஆண்டு வட்டி 6.80 சதவீதம் கொண்ட பத்தாண்டு காலத் தனியார் கடன் பத்திரங்கள் மூலம் 750 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. இந்தக் கடனுக்கான கட்டமைப்பின் அடிப்படை அளவு ரூ.500 கோடி. கூடுதல் ஒதுக்கீடு விருப்பத்தேர்வு வசதி ரூ.250 கோடி என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

திரட்டப்பட வேண்டிய தொகைக்கும் 3.87 மடங்கு அதிகமாக - அதாவது 2899 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. கோவிட்-19 தாக்குதல் இருக்கும் சூழலிலும் இந்தக் கடன் பத்திரங்களுக்கு சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. நடப்பு நிதியாண்டில் மிகக்குறைந்த கூப்பன் விகிதம் 6.80 சதவீதம்  AAA ரேட்டிங் மதிப்பீடு உள்ள 7.10 சதவிகிதம் கொண்ட பத்தாண்டு காலக் கடன் பத்திரங்களைக் காட்டிலும், இது, 30 பிபிஎஸ் (bps) குறைவு - அதாவது 0.30 சதவீதம் குறைவு. தேசிய நீர்மின்சக்தி நிறுவனம் உயர்ந்தபட்சக் கடன் நற்சான்றிதழ்களைக் கொண்டுள்ளது. முன்னணி மதிப்பீட்டு முகமைகள், தேசிய நீர்மின்சக்தி நிறுவனத்துக்கு ‘AAA’ மதிப்பீடு அளித்துள்ளன.


(रिलीज़ आईडी: 1617580) आगंतुक पटल : 251
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Gujarati , Telugu