உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        உயிர்காக்கும் உதான் சேவையில் 392 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                27 APR 2020 7:23PM by PIB Chennai
                
                
                
                
                
                
                உயிர்காக்கும் உதான் சேவையில்  ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை, தனியார் விமானங்கள் ஆகியவற்றின் மூலம் 392 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 229 விமானங்கள் ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் ஏர் நிறுவனங்களால் இயக்கப்பட்டன. இதுவரை, 736.00  டண் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொண்ட சரக்குப் போக்குவரத்து கையாளப்பட்டுள்ளது. இது நாள்வரை உயிர்காக்கும் உதான் விமானங்கள் 3,89,100 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வானில் பயணித்துள்ளன. கோவிட் 19 தொற்றுக்கு எதிராக நாடு மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக, நாட்டிலுள்ள தொலைதூரப் பகுதிகளுக்கு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொண்ட சரக்குப் போக்குவரத்தைக் கையாள்வதற்காக, இந்த உயிர்காக்கும் உதான் விமானங்கள், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றன.
 
உள்நாட்டில் உயிர்காக்கும் உதான் சரக்குப் போக்குவரத்தில், கோவிட்19 தொடர்பான ரீஏஜென்டுகள், என்சைம்கள், மருத்துவக்கருவிகள், பரிசோதனைக் கிட்டுகள், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள், கவசங்கள், கையுறைகள், எச் எல் எல் மற்றும் ஐசிஎம்ஆர் அமைப்புகளின் இதர பொருட்கள், மாநில / யூனியன் பிரதேச அரசுகளால் கேட்டுக்கொள்ளப்பட்ட சரக்குகள், அஞ்சல் உறைகள் போன்ற சரக்குகள் கையாளப்பட்டன. வடகிழக்கு பகுதிகள், தீவுப்பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள்  ஆகிய இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், லடாக், வட-கிழக்கு மற்றும் இதர தீவுப் பகுதிகளுக்கு ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப்படை விமானங்கள், சேவையாற்றியுள்ளன. 
                
                
                
                
                
                (Release ID: 1618882)
                Visitor Counter : 219
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada