சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலராக கிரிதர் அரமான் பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
01 MAY 2020 8:04PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலராக திரு. கிரிதர் அரமான் இன்று மே 01ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். “கோவிட் 19” தொற்று பரவியுள்ள இந்தச் சூழ்நிலையில் முக்கியமான விஷயங்கள் குறித்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் அவர் விவாதித்தார்.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார்.
கிரிதர் இதற்கு முன்பு அமைச்சரவை செயலகத்தின் கூடுதல் செயலாளராக இருந்தார். அத்துடன் 2012-14ம் ஆண்டில் மத்திய பெட்ரோலிய, இயற்கை வாயு அமை்சகத்தில் இணைச் செயலராகவும் அவர் பணியாற்றினார். 1988ம் ஆண்டு சிவில் சர்வீஸ் அலுவல் பணியை ஆந்திரப் பிரதேச மாநில பிரிவில் தொடங்கிய அவர், ஐஐடி சென்னையில் சிவில் இன்ஜினீயரிங் எம்.டெக் படிப்பை முடித்தவர். அத்துடன் பொருளாதாரவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். மேலும் சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நிதி மற்றும் வங்கியியல் துறைக்கான பயிற்சியையும் பெற்றார். இவை மட்டுமின்றி பெங்களூர் இந்திய மேலாண்மையியல் நிறுவனம், புது தில்லி, அன்னிய வர்த்தக இந்திய நிறுவனம், புனே, டாடா மேலாண்மையையில் பயிற்சி மையம் ஆகியவற்றிலும் மேற் கல்வி பயின்றவர்.
கிரிதர் அரமான் ஆந்திரப் பிரதேசத்தில் களப்பணி, கொள்கை வகுக்கும் பணி எனப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அமைப்புசார் பணிகளிலும், நிதி விவகாரங்களிலும் மிகுந்த அனுபவம் பெற்றவர்.
****
(रिलीज़ आईडी: 1620398)
आगंतुक पटल : 215