மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

“ராஜஸ்தான் சுற்றுலா மற்றும் பயணங்கள்” என்ற தலைப்பில் சுவரொட்டி தயாரிக்கும் போட்டி: Ek Bharat Shreshtha Bharat ஒரே பாரதம் சீர்மிகு பாரதம் EBSB இயக்க உணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில் IIIT குவஹாத்தி நடத்தியது

प्रविष्टि तिथि: 12 MAY 2020 6:09PM by PIB Chennai

நம்நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறப்பான தன்மையைக் கொண்டாடும் வகையில் ஏக் பாரத் சிரேஷ்ட பாரத் - ஒரே பாரதம் சீர்மிகு பாரதம் என்ற இயக்கம் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. பல அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தப்படும் இந்த இயக்கத்திற்கு மைய அமைச்சகமாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுகிறது. கோவிட்-19 காரணமாக விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கக் காலத்தின் போதும், இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக குவஹாத்தியில் உள்ள இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைப்பு IIIT, சுவரொட்டி தயாரிப்பு போட்டி ஒன்றை நடத்தியது. தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, இந்தப் போட்டியில் பங்கேற்கும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்தப் போட்டிக்கான தலைப்பு “ராஜஸ்தான் சுற்றுலா மற்றும் பயணங்கள்”

 

கோவிட்-19 காரணமாக இந்த அமைப்பின் மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் சில ஆசிரியர்களும் ஐஐஐடி வளாகத்தை விட்டு வெளியேறியதால் செயல்பாடுகள் தடைப்பட்டிருந்தன. இபிஎஸ் பி இயக்கம் தொடர்பான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் மாதந்தோறும் நிகழும் இந்த நிகழ்ச்சியை - ஏப்ரல் மாதத்திற்கான நிகழ்ச்சி 1 மே 2020 அன்று நடத்தப்பட்டது.


(रिलीज़ आईडी: 1623348) आगंतुक पटल : 319
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi