மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        பெருந்தொற்று, பொது முடக்கம் ஆகியவற்றின் உளவியல்  சமூக ரீதியான தாக்கத்தை சமாளிப்பது குறித்து ஏழு கட்டுரைகளை வெளியிட்டார் மத்திய மனிதவள அமைச்சர் 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                15 MAY 2020 7:26PM by PIB Chennai
                
                
                
                
                
                
                கொரோனா ஆய்வுகள் தொடரின் கீழ் இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஏழு நூல்களின் தொகுப்பின் அச்சு மற்றும் மின் நூல்களை மத்திய மனிதவள அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று இணைய வழியில் வெளியிட்டார். அப்போது உரையாற்றிய மத்திய அமைச்சர் “இந்த நாட்களில் உலகம் சந்தித்து வருகின்ற மிகவும் வலுவான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில், இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை குறிப்பிடத்தக்க இந்த நூல் தொகுப்பினை கொண்டு வந்துள்ளது. பெருமளவிலான மக்களின் மனரீதியான நலனுக்கு வழிகாட்டியாக இவை விளங்கும் என்றும் நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார். இந்தத் தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து இந்திய தேசிய புத்தக அறக்கட்டளையின் கல்விக் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர்கள்/ ஆசிரியர்களுடன் இணையவழி கலந்துரையாடலும் நடைபெற்றது.
அதன் தனித்தன்மை மிக்க முயற்சிகளுக்காக இந்திய தேசிய புத்தக அறக்கட்டளையைப் பாராட்டிய திரு. நிஷாங்க் எளிதாக மக்கள் படிக்கும் வகையில் இந்தக் குறிப்பிடத்தக்க விஷயத்தை புத்தக வடிவில் கொண்டு வந்தவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் தனது நன்றியறிதலை தெரிவித்துக் கொண்டார். முன் தடுப்பு முறையிலான மன நல முயற்சிகள் மிக முக்கியமான விஷயம் என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் செயல் வீரர்களாக நாம் அனைவரும் இந்த சிக்கலான தருணத்தில் முன்வர வேண்டிய தேவை உள்ளது என்றும் கூறினார். நமது மனமும் உளவியல் ரீதியான நலனுமே நமது செயல்களைத் தீர்மானிக்கின்றன என்ற புகழ்பெற்ற வரிகளை அவர் மேற்கோள் காட்டினார்.
ஏழு உளவியல் நிபுணர்கள், ஆலோசகர்கள் ஆகியோர் அடங்கிய கல்விக் குழுவை இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை உருவாக்கியிருந்தது. கொரோனாவிற்கு பிந்தைய காலத்தின் தேவைகளுக்காக அனைத்து வயதினருக்கும் பொருந்தும்படியான பொருத்தமான நூல்களை வழங்குவது அது குறித்து ஆவணப்படுத்துவது என்பதற்காகவே இந்த கொரோனா ஆய்வுத் தொடரை இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை வடிவமைத்திருந்தது.   “பெருந்தொற்றின் உளவியல் ரீதியான, சமூக ரீதியான தாக்கம் மற்றும் அதை எவ்வாறு எதிர்கொள்வது” என்ற விஷயத்தில் கவனம் செலுத்தும் நூல்களின் முதல் துணைத் தொடராகும் இது. 
                
                
                
                
                
                (Release ID: 1624357)
                Visitor Counter : 360