விவசாயத்துறை அமைச்சகம்
ராஜஸ்தானிலும் குஜராத்திலும் ஹரியானாவிலும்11மாவட்டங்களில், 37 இடங்களில் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு செயல்பாடுகள் 30-31ஜூலை 2020 இரவில் நடைபெற்றன.
Posted On:
31 JUL 2020 5:50PM by PIB Chennai
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர், பிகானேர், சுறு, நகோர், ஹனுமான் கர், ஜலோர், சிரோஹி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், 34இடங்களிலும், குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் இரு இடங்களிலும் வெட்டுக்கிளி வட்ட அலுவலகங்கள் (எல்சிஓக்கள்) மூலமாக வெட்டுக்கிளிகள்/தத்துக்கிளிகள் கூட்டத்திற்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 30-31 ஜூலை 2020 இரவில் எடுக்கப்பட்டன. இவை தவிர, ஹரியானா மாநில வேளாண்துறை 30-31 ஜூலை 2020 இரவில், பிவானி மாவட்டத்தில் ஒரு இடத்தில் சிறு கூட்டங்களாக, ஆங்காங்கே காணப்பட்ட வெட்டுக்கிளிக் கூட்டங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
11 ஏப்ரல் 2020 முதல் 30 ஜூலை 2020 வரை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில், 2 லட்சத்து 26 ஆயிரத்து 979 ஹெக்டேர் நிலப்பரப்பில் எல் சி ஓ கள் மூலமாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 30ஜூலை 2020 வரை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஹரியானா, உத்தரகண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் மாநில அரசுகளின் மூலம் 2 லட்சத்து 29ஆயிரத்து 582ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
குஜராத், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கணிசமான அளவில் பயிர்ச்சேதம் எதுவும் உள்ளதாக அறிக்கை எதுவும் இல்லை. ஆனால் ராஜஸ்தானில் சில மாவட்டங்களில், சிறிய அளவிலான பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறாத இளஞ்சிவப்பு வண்ண வெட்டுக்கிளிகள் கூட்டங்கள், முழுமையாக வளர்ச்சி பெற்ற மஞ்சள்நிற வெட்டுக்கிளிகள்/ தத்துக் கிளிகள் இன்று 31.7.2020 அன்று ராஜஸ்தானில் ஜெய்சால்மர், பார்மர், ஜோத்பூர், பிகானேர், சுறு, நகோர், ஹனுமான் கர்,ஜலோர், சிரோஹி ஆகிய இடங்களிலும், ஹரியானாவில் பிவானி மாவட்டத்திலும், குஜராத்தில் கட்ச் மாவட்டத்திலும் கூட்டமாகக் காணப்படுகின்றன.
****
(Release ID: 1642714)