மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நான்காவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் பிரமாண்டமான இறுதிச் சுற்று இன்று நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
04 AUG 2020 9:41PM by PIB Chennai
நான்காவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் பிரமாண்டமான இறுதிச் சுற்று இன்று நிறைவடைந்தது. 2020 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை, நாடெங்கிலும் நாற்பது மெய்நிகர் மையங்களில், காணொலிக் காட்சி வாயிலாக இது நடைபெற்றது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று நடைபெற்ற ஹேக்கத்தானின் பிரமாண்டமான இறுதிச் சுற்று நிகழ்வில் பிரதமர் தி்ரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். தற்சார்புடைய இந்தியாவை உருவாக்குவதற்கான புதிய நுட்பங்களைக் கண்டுபிடிக்கும் இளைஞர்களின் முயற்சிகளை அவர் புகழ்ந்துரைத்தார்.
ஐதராபாத்தில் உள்ள இந்திய காவல் பயிற்சி அகாடமியின் உதவியுடன், மெய்நிகர் காவல் நிலையம், குற்றத்தைக் கண்டுபிடிப்பதற்கான செயற்கை நுண்ணறிவு வாயிலாக செய்யப்படும் எச்சரிக்கை ஆகியவற்றை உருவாக்க பணியாற்றிக் கொண்டிருக்கும் மூன்று குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார். மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், பெருவாரியான மக்களை சென்றடைவதற்கான பொருட்களைக் கண்டுபிடிக்கவும், களத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1643418
*******
(रिलीज़ आईडी: 1643478)
आगंतुक पटल : 237