ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இந்த ஆண்டு ஜூலை வரையிலான காலத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில் 94 மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 73 மையங்கள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

प्रविष्टि तिथि: 11 AUG 2020 5:14PM by PIB Chennai

இந்திய மருந்தாளுமை அலுவலக பொதுத்துறை நிறுவனங்கள் (Bureau of Pharma PSUs of India - BPPI) ஜம்மு காஷ்மீரில் 91 மக்கள் மருந்தக மையங்களையும், லடாக் பகுதியில் 3 மக்கள் மருந்தக மையங்களையும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் திறந்துள்ளன. உயர்ந்த தரம் வாய்ந்த ஜெனரிக் மருந்துகள், குறைவான விலையில், அந்தப் பகுதி மக்களுக்கு கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

 

கடந்த ஓராண்டு காலத்தில் ஜம்மு-காஷ்மீரிலும், லடாக்கிலும் மொத்த விற்பனை 4.39 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. இதனால் இந்தப் பகுதி மக்கள் 3.1 கோடி ரூபாய் அளவிற்கு சேமிக்க முடிந்தது. ஜம்மு-காஷ்மீர் அரசு, லடாக் அரசு ஆகியவை 73 புதிய மக்கள் மருந்தக மையங்களைத் திறக்கத் திட்டமிட்டு, இதற்கான இடங்களும் தெரிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் புதிய மருந்தாளுமைக் கவுன்சில்கள் அமைக்கப்பட்ட பிறகு, புதிய மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்படும்.

 

இந்த மக்கள் மருந்தக மையங்கள் மூலமாக மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பெண்கள் உபயோகிக்கக்கூடிய சுகாதார அணையாடைகள் (சானிட்டரி பேட்) ஜன் அவுஷதி சுவிதா சானிட்டரி பேட்ஒன்று ஒரு ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்த சானிட்டரி பேடுகளை இந்திய மருந்தாளுமை அலுவலக பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மொத்தமாகக் கொள்முதல் செய்து, இலவச விநியோகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்திய மருந்தாளுமை அலுவலக பொதுத்துறை நிறுவனங்கள் இதுவரை 1.56 கோடி சானிட்டரி பேடுகளை ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதிக்கு வழங்கியுள்ளது. தேசிய சுகாதார இயக்கம், இவற்றை ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்த்யகார்யக்ரம் (“Rashtriya Kishore Swasthya Karyakram - RKSK)” திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கும் இளங்கன்னியருக்கும் இலவசமாக விநியோகித்து வருகிறது.

 

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/WhatsAppImage2020-08-11at17.09.408KHK.jpeg

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/WhatsAppImage2020-08-11at17.10.53PLYX.jpeg

 

 

****


(रिलीज़ आईडी: 1645151) आगंतुक पटल : 352
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu