பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

“ஸ்வஸ்தயா” என்ற பழங்குடியினர் சுகாதாரம், ஊட்டச்சத்து போர்ட்டல், தேசிய அயல்நாட்டு போர்ட்டல், தேசிய பழங்குடியினர் கல்வி உதவித்தொகை போர்ட்டல் ஆகியன தொடங்கப்பட்டுள்ளன

Posted On: 17 AUG 2020 4:25PM by PIB Chennai

 “ஸ்வஸ்தயாஎன்ற பழங்குடியினர் சுகாதாரம், ஊட்டச்சத்து போர்ட்டல், அலேக் என்ற சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த இ-செய்தி இதழ், தேசிய அயல்நாட்டு போர்ட்டல் மற்றும் தேசியப் பழங்குடியினர் கல்வி உதவித்தொகை போர்ட்டல் உள்ளிட்ட தொடர்ச்சியான முன்னெடுப்பு நடவடிக்கைகளை பழங்குடியினர் உறவுகள் அமைச்சகம் இன்று அறிவித்துள்ளதுஇந்த நிகழ்ச்சியில் பழங்குடியினர் உறவுகளுக்கான மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, பழங்குடியினர் உறவுகள் இணையமைச்சர் திருமதி. ரேணுகா சிங் சருதா, அமைச்சரவை செயலகத்தின் செயலாளர் (ஒருங்கிணைப்பு) திரு. வி.பி.ஜாய் மற்றும் பழங்குடியின உறவுகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு. தீபக் கன்தேகர் தலைமையில் அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். பழங்குடியினர் உறவுகள் அமைச்சகத்தின் இணைச்செயலாளர் திரு.நவல்ஜித் கபூர், அமைச்சகத்தின் செயல்நிலை டேஷ் போர்டை எடுத்துக்காட்டி உரையாற்றினார்இதில் 11 திட்டங்களால் ஏற்பட்ட பல்வேறு வகையான பலன்களின் குறிகாட்டிகள் மற்றும் அமைச்சகத்தின் புதிய முன்னெடுப்புகள் சுட்டிக் காட்டப்பட்டன.

இந்த வகையில் முதல் இ-போர்ட்டலான ஸ்வஸ்தயாஎன்ற பெயரிலான பழங்குடியின சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான இ-போர்ட்டலை திரு. அர்ஜுன் முண்டா தொடங்கி வைத்தார்ஒற்றை பிளாட்ஃபாரத்தில் இந்தியாவின் பழங்குடியின மக்கள் தொடர்பான அனைத்து சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தகவல்களை இந்த போர்ட்டல் வழங்கும்.  புதிய நடைமுறைகள், ஆராய்ச்சியின் சுருக்கங்கள், களஆய்வுகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரட்டப்பட்ட நடைமுறைகள் ஆகியவற்றை ஸ்வஸ்தயா போர்ட்டல் சேகரித்து வழங்கும். இது சான்றுகள், நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ள உதவியாக இருக்கும்.  சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த அறிவு மேலாண்மைக்கான தனிச்சிறப்பு மையமாக பிரமல், ஸ்வஸ்தயா அமைப்பை பழங்குடியினர் உறவுகள் அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.  இந்தத் தனிச்சிறப்பு மையம் அமைச்சகத்தோடு தொடர்ந்து இணைந்து செயல்பட்டு இந்தியாவில் பழங்குடியின மக்களுக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கொள்கைகளை சான்றாதாரங்களின் அடிப்படையில் வகுக்கவும் முடிவுகள் எடுக்கவும் தேவையான உள்ளீடுகளை வழங்கும்.  http://swasthya.tribal.gov.in என்ற இந்த போர்ட்டல் என்.ஐ.சி கிளவுட்டில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது திரு.அர்ஜுன் முண்டா ”அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பு கிடைப்பது என்பது நமது பிரதம மந்திரியின் அதிகபட்ச முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. பொது சுகாதார தர நிலைகள் காலத்திற்கேற்ப மேம்பட்டு வந்தாலும் கூட பழங்குடியின மக்களுக்கும் பழங்குடியினர் அல்லாத மக்களுக்கும் இடையே வித்தியாசங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.  பழங்குடியினர் உறவுகள் அமைச்சகத்தில் நாங்கள் இந்த இடைவெளியை இட்டு நிரப்புவதற்கு உறுதி ஏற்றுள்ளோம்.  ஸ்வஸ்தயா போர்ட்டல் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  நமது தேசத்தின் பழங்குடியின மக்களுக்கு சேவையாற்றுகின்ற மிகப்பெரும் குறிக்கோளை நோக்கிய முதல் படியாக இந்தப் போர்ட்டலின் தொடக்கம் அமைந்துள்ளது.  அனைத்துப் பங்குதாரர்களிடம் இருந்தும் கிடைக்கும் உதவியுடன் ஆரோக்கியமான இந்தியா என்ற நமது பிரதம மந்திரியின் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்வதற்கு வலிமையுடன் செயலாற்ற முடியும் என்றும் சிறப்பாக சேவையாற்ற முடியும் என்றும் நான் நம்புகிறேன் மற்றும் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

-------
 (Release ID: 1646591) Visitor Counter : 314