சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியா கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நாள் ஒன்றுக்கு ஒன்பது லட்சம் மாதிரிகளை பரிசோதித்துள்ளது

கொவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கை நான்கு கோடியை நெருங்குகிறது
கடந்த இரண்டு வாரங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Posted On: 28 AUG 2020 1:15PM by PIB Chennai

மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின், ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக தீவிரப் பரிசோதனைகள் மற்றும் மேம்பட்ட மருத்துவ சிகிச்சையில் கவனம் செலுத்தியதால்,  இந்தியா இரண்டாவது நாளாக ஒரே நாளில் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியா ஏற்கனவே, நாள் ஒன்றுக்கு 10 லட்சம் சோதனைகள் செய்யும் திறனைப் பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,01,338 மாதிரிகளை பரிசோதித்துள்ளது.

 

தொடர்ந்து அதிகரித்து வரும் கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கை நான்கு கோடியை நெருங்குகிறது. இன்றைய நிலவரப்படி பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,94,77,848 ஆகும்.  கடந்த இரண்டு வாரங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

 

 

பத்து லட்சம் பேருக்கு 28,607 சோதனைகள்  என்ற விகிதத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது.

 

பரிசோதனை ஆய்வுக்கூட வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு நாட்டில் மொத்தமுள்ள பரிசோதனை ஆய்வுக் கூடங்களின் எண்ணிக்கை 1564. இவற்றுள் 998 அரசு ஆய்வு கூடங்கள். 566 தனியார் ஆய்வுக்கூடங்கள். விவரங்கள் பின் வருமாறு:

 

ரியல் டைம் ஆர் டி பி சி ஆர் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 801 (அரசு 461 தனியார் 340)

 

ட்ரூ நாட் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 643 (அரசு 503 தனியார் 140)

 

சி பி என் ஏ ஏ டி அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 120 (அரசு 34 தனியார் 86)

 

கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA என்ற இணையதளத்தைப் பாருங்கள்

 

 

 

****



(Release ID: 1649224) Visitor Counter : 242