எரிசக்தி அமைச்சகம்

பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO) அந்நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் ஆற்றிய அசாதாரண பங்கை ஏற்று கொள்வதுடன், அதனைக் கொண்டாட ”பெண்கள் சக்தி” என்ற வீடியோவை வெளியிடுகிறது

प्रविष्टि तिथि: 28 AUG 2020 2:55PM by PIB Chennai

பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO), தேசிய பவர் கிரிட் ஆபரேட்டர் மற்றும் மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம் இன்று அந்நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் ஆற்றிய அசாதாரண பங்கை ஏற்றுக் கொள்வதுடன் அதனைக் கொண்டாடுவதற்கும்பெண்கள் சக்திஎன்ற வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவை கார்ப்பரேட் மத்திய அலுவலகத்திலிருந்து இயக்குநர் எச்.ஆர். மீனாட்சி தாவர் ஒரு காணொளிக் காட்சி வாயிலாக வெளியிட்டார், அதில் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குர் கே.வி.எஸ் பாபா; இயக்குநர் சிஸ்டம் ஆபரேஷன், எஸ் ஆர் நரசிம்மன்; இயக்குநர் சந்தைச் செயல்பாடு, எஸ் எஸ் பார்பண்டா; இயக்குநர் நிதி, ஆர் கே ஸ்ரீவஸ்தவா; எஸ் கே சோனி, ஆலோசகர், போசோகோ (POSOCO); மற்றும் அனைத்து அனைத்து பிராந்திய சுமை அனுப்பும் மையத் தலைவர்களும் (RLDC), பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (POSOCO) உள்ள நிறுவன வரிசை முறை முழுவதும் பெண்கள் பணிக்குழுவின் முக்கிய அங்கமாக உள்ளனர். இந்த் நிறுவனத்தின் (POSOCO) மேலாண்மை, பெண் ஊழியர்களுக்கு தொழில்முறை வளர்ச்சி, வேலை-வாழ்க்கை சமநிலை, அறிவுப் பகிர்வு மற்றும் ஒருவருக்கொருவர் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள ஒரு குழு ஆகியவற்றிற்குப் போதுமான வாய்ப்புகளையும் வழிகளையும் வழங்குகிறது. பெண் ஊழியர்களுக்கான முன் முயற்சிகள் போசோகோவில் (POSOCO) இயற்கையாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

பின்வரும் இணைப்பு மூலம் வீடியோவை அணுகலாம். https://posoco.in/video-gallery/.

***********


(रिलीज़ आईडी: 1649255) आगंतुक पटल : 389
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Marathi , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Telugu