வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பிரதமரின் தெரு வியாபாரிகள் தற்சார்பு இந்தியா நிதிக்கான ஆன்லைன் டாஷ்போர்டு தொடக்கம்

प्रविष्टि तिथि: 28 AUG 2020 4:02PM by PIB Chennai

தொருவோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு இந்தியா நிதிக்கு (பிரதமர் ஸ்வாநிதி) இணையப் பலகணியை (Dash Board) மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைச் செயலர் திரு. துர்கா சங்கர் மிஷ்ரா காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த இணையப் பலகணி சக்தி வாய்ந்த , ஊடாடும் வல்லமை கொண்டது. தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஒரே இடத்தீர்வை வழங்கக்கூடியதுநகர அளவில், இந்த நிதியின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்க இது பயன்படும்.

பிரதமர் ஸ்வாநிதித் தளம் குறித்த விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வது 2020 ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. இது முதல், 7.15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.70 லட்சத்துக்கும் அதிகமானவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஸ்வாநிதி 2020 ஜூன் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோவிட்-19 பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட  தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மீண்டும் செய்து, வாழ்வாதாரம் பெறுவதற்கு  தேவையான முதலீட்டைக் கடனாக வழங்க இது வகை செய்கிறது.


(रिलीज़ आईडी: 1649285) आगंतुक पटल : 313
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Odia , Telugu , Malayalam