வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகப் பணிகள் குறித்த பரிசீலனைக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திரசிங் தலைமை வகித்தார்

Posted On: 28 AUG 2020 5:28PM by PIB Chennai

சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மூங்கில் கூடைகள், அகர்பத்திகள், மூங்கில் ரி ஆகியவற்றைத் தயாரிப்பதற்காக, ஜம்மு, கத்ரா, சம்பா ஆகிய பகுதிகளில், 3 மூங்கில் தொகுப்புகள் அமைக்கப்படும் என்று வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத் துறை, பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆகிய துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர்.ஜிதேந்திர சிங் கூறினார். இவை தவிர ஜம்மு காஷ்மீருக்கு அருகே காட்டியில், மூங்கில் தொழிலுக்கான பெரும் பூங்கா ஒன்றும், இந்த மண்டலத்தில் மூங்கில் தொழில்நுட்பப் பயிற்சி மையம் ஒன்றும் அமைக்கப்படும் என்றும், இவற்றுக்காக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் நிலம் ஒதுக்கிய பின், இரண்டு ஆண்டுகளுக்குள் இவை செயல்படும் என்றும் அவர் கூறினார். வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிசீலனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், ஜம்மு-காஷ்மீரில் மூங்கில் துறையில் கட்டமைப்பையும் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப் படுவதையும் அதிகரிக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட பின் இனிவரும் நாட்களில் இதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.



(Release ID: 1649297) Visitor Counter : 213