சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் 64 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1.16 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இரண்டு பேர் கைது
प्रविष्टि तिथि:
28 AUG 2020 7:36PM by PIB Chennai
ஏர் இந்தியா விமானம் iX1636 மூலமாக சார்ஜாவில் இருந்து வரும் பயணி ஒருவர் தங்கம் கடத்திக் கொண்டு வரும் வாய்ப்புள்ளது என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏ ஐ யு அதிகாரிகள் கடத்தல்காரர்களைப் பிடிக்க சிறப்புக் கண்காணிப்பு நடத்தினர். அவசரமாகச் செல்ல வேண்டும் என்பது போல் இருந்த பயணி ஒருவர், தன்னிடமிருந்த அட்டைப் பெட்டியுடன் அவசரமாகச் சென்ற போது, அவரை வெளியில் செல்லும் வாயிலில் மடக்கிப் பிடித்தனர். அவர், தமிழ்நாட்டின் திருவாரூரைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (54) என்பது தெரியவந்தது. அந்த அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதனுள் துணிமணிகள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் சில கருவிகள் கொண்ட கிட் ஒன்று இருந்தது. அந்த வீட்டுக்குள் மின்சார ரெஞ்ச் இயந்திரம் இருந்தது. திருகுகளையும், மறைகளையும் சரி செய்வதற்கான அந்த இயந்திரம் அசாதாரண கனத்துடன் இருந்தது. அதைத் திறந்து பார்த்த போது அதற்குள்ளே உருளை வடிவிலான உலோகத்துண்டு ஒன்று கருப்பு வர்ணம் பூசப்பட்டு மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை மதிப்பீடு செய்பவர், அந்தக் கருப்பு வர்ணத்தை அகற்றிவிட்டு, அந்த உலோக உருளை 24 கேரட் கொண்ட 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.16 கிலோ எடை கொண்ட தங்கத்தால் செய்யப்பட்டது என்று சான்றளித்தார். கடத்தல்காரனிடம் இருந்து அதை மீட்டு சுங்கச் சட்டம் 1962படி கைப்பற்றப்பட்டது.
கருவியை ஷார்ஜா விமான நிலையத்தில், தனக்குத் தெரியாத ஒருவர், தன்னிடம் கொடுத்து, அவர் தனிமைப்படுத்தப்படும் போது (கிண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில்) அந்த இடத்தில் ஒருவர் அவரைத் தொடர்பு கொள்வார் என்றும், அவரிடம் அதைக் கொடுத்து விடுமாறும் கூறினார்கள் என்றும் அந்தப் பயணி தெரிவித்தார் அந்தப் பயணிக்கு பரிசோதனை நடத்திய பிறகு ஏ ஐ யு குழு ஒன்று அவருடன் பேருந்தில் சென்றது. மற்றொரு குழு பேருந்தின் பின்னே சென்றது. அந்த ஹோட்டலை அடைந்தவுடன் அவருக்காகக் காத்திருந்த நபரை அந்தப் பயணி தொடர்பு கொண்டு காத்திருந்தவரிடம் அந்தக் கருவியை ஒப்படைத்தார். பயணியும் அந்த கருவியைப் பெற்றுக் கொண்ட சென்னையைச் சேர்ந்த முகமது ஆசிப் 33 என்ற நபரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது


(रिलीज़ आईडी: 1649317)
आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English