சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

விளையாட்டு அறிவியலில் விரைவில் உலகத்தின் மையமாக இந்தியா மாறும் -புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் இளையராஜா தகவல்

Posted On: 28 AUG 2020 8:29PM by PIB Chennai

இந்தியாவில் விளையாட்டுக்கான அக்கறையும் கவனமும் அதிகரித்து வருகின்றதுவிளையாட்டு சார்ந்த படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்கூட அதிகரித்து வருகின்றனமேலும் விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடி வருகின்றதுவிளையாட்டை பொழுது போக்காகப் பார்க்காமல் தொழிலாக இன்றை இளைஞர்கள் பார்க்கத் தொடங்கி உள்ளனர். எனவே விளையாட்டு அறிவியலில் (SPORTS SCIENCES) மிக விரைவில் இந்தியா உலகத்தின் மையமாக மாறும் என்று புதுவைப் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கள் துறை பேராசிரியர் டாக்டர் எம்.இளையராஜா தெரிவித்தார்.

மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகமும் புதுச்சேரி மாநில நாட்டுநலப் பணித்திட்ட பிரிவும் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையமும் இணைந்து இன்று பிற்பகல் நடத்தியதேசிய விளாயாட்டுக்கள் தினம் மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம்குறித்த காணொளி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய போது திரு இளையராஜா இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் தொற்று நோய்கl ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் தொற்றாத நோய்கள் இப்போது அதிகரித்து வருகின்றனஉடல் உழைப்பு குறையும் போதும் கை,கால் இயக்கங்கள் குறையும் போதும் இந்தத் தொற்றாத நோய்கள் அதிகரிக்கின்றனஉடல் உழைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும் உடற்பயிற்சியையும் விளையாட்டையும் தினசரி பழக்கமாக்கிக் கொண்டால் தொற்றா நோய்கள் வராமல் உடலைக் காத்துக் கொள்ளலாம்ஜோக்கோவிச் மற்றும் உசேன் போல்ட் போன்ற விளையாட்டு வீரர்களுக்கும் கூட கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறதுஎனவே நமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல்  நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று இளையராஜா மேலும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இணை இயக்குனர் ஜெ.காமராஜ் அறிமுகவுரை ஆற்றினார்யோகா மற்றும் தியானம் போன்றவை மனதை ஒருமுகப்படுத்துவதை வலியுறுத்துகின்றன.  மனம் பண்படுத்தப்பட்டால்தான் உடல் வலிமை பெறும்உடலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனதுக்கு இருப்பதினால் உடலையும் மனதையும் ஒரு சேர நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று காமராஜ் தனது உரையில் குறிப்பிட்டார்.

மாநில நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் முனைவர் .குழந்தைசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நகரப் பகுதிகளில் உள்ளவர்கள் தினசரி மிதிவண்டி ஓட்டினால் அதுவே மிகப் பெரிய உடற்பயிற்சியாக அமையும்விளையாட்டு என்ற உடனேயே இன்றைய மாணவர்களுக்குக் கணினி விளையாட்டுகள்தான் நினைவில் வருகின்றனகணினி விளையாட்டுக்கு இன்றைய தலைமுறையினர் அடிமையாகி வருகின்றனர். கணினியால் கண்பார்வையை இழந்து விடக்கூடாது என்று முனைவர் குழந்தைசாமி தெரிவித்தார்

புதுச்சேரி அரசின் விளையாட்டுக்கள் மற்றும் இளையோர் நலன் துணை இயக்குனர் திரு.பி.நரசிங்கம் கருத்துரை ஆற்றினார்விளையாட்டுகளுக்கு அரசு ஊக்கமளித்து வருகிறதுஇன்றைய மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் உடல் திறனை வலுப்படுத்திக் கொண்டு விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும் என்று நரசிங்கம் தனது உரையில் கேட்டுக் கொண்டார்.

மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அலுவலரும் நிர்வாக அதிகாரியுமான டாக்டர் .இராஜேந்திரகுமார் தனது சிறப்புரையில் ஃபிட் இந்தியா இயக்கமானது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இன்றைய தலைமுறையினர் உணவில் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும்உண்ணக் கூடியவை எவை, உண்ணக் கூடாதவை எவை என்ற தெளிவான அறிவு அவர்களுக்கு வேண்டும்மேலும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் விளையாடுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று டாக்டர் ராஜேந்திர குமார் மேலும் கேட்டுக் கொண்டார்.

ண்டல சித்த மருத்து ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் .லாவண்யா பாரம்பரிய விளையாட்டுக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். உடற்பயிற்சி என்பது பொழுது போக்கல்லமாறாக அது உடலின் வெளியுறுப்புகள், உள்ளுறுப்புகள் மற்றும் மனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒருமுகப்படுத்தும் செயல் ஆகும்இன்றைய நமது அடுப்பங்கரை தனது அடையாளத்தை இழந்துள்ளதுஅதனாலேயே நாம் பல நோய்களுக்கு ஆளாகிறோம்உடலுழைப்பு இருந்தால் ஹார்மோன் சுரப்பு சம நிலையில் இருக்கும் என்று டாக்டர் லாவண்யா தெரிவித்தார்.

வரவேற்புரை ஆற்றிய மக்கள் தொடர்பு களஅலுவலக உதவி இயக்குனர் முனைவர் தி.சிவக்குமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா இயக்கமானது பள்ளிக்கூடங்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகளின் அடிப்படையில் தகுதிச் சான்றதழ்களை வழங்கி வருகிறதுஃபிட் இந்தியா கொடிச் சான்றிதழை புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 194 பள்ளிகள் பெற்றுள்ளனமூன்று நட்சத்திர சான்றிதழுக்கு 50 பள்ளிக்கூடங்களும் ஐந்து நட்சத்திர சான்றிதழுக்கு 16 பள்ளிக் கூடங்களும் விண்ணப்பித்து உள்ளன என்று சிவக்குமார் தனது உரையில் குறிப்பிட்டார்.

களவிளம்பர உதவி அலுவலர் திரு மு.தியாகராஜன் நன்றி கூறினார்நிகழ்ச்சியில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், தொண்டுநிறுவன பிரதிநிதிகள் மற்றம் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்த கொண்டனர்.

டாக்டர் .இராஜேந்திரகுமார்

டாக்டர் .லாவண்யா

மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி

முனைவர்.எம்.இளையராஜா

பேராசிரியர்

உடற்கல்வி & விளையாட்டுகள் துறை, புதுச்சேரி பல்கலைக்கழகம்

கணொளிக் கருத்தரங்கக் காட்சி

முனைவர்..குழந்தைசாமி

மாநில என்.எஸ்.எஸ்.தொடர்பு அலுவலர், புதுச்சேரி

திரு.ஜெ.காமராஜ்

இணை இயக்குனர்

மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்

சென்னை

திரு.பி நரசிங்கம்

துணை இயக்குனர்

விளையாட்டு & இளையோர் நலன்

புதுச்சேரி



(Release ID: 1649355) Visitor Counter : 130