பாதுகாப்பு அமைச்சகம்

சூழல் நிலவரம்; கிழக்கு லடாக்

प्रविष्टि तिथि: 31 AUG 2020 10:35AM by PIB Chennai

2020 ஆகஸ்ட் 29/30 இரவில், ராணுவ, ராஜிய ரீதியில் முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட நிலைக்கு மாறாக, கிழக்கு லடாக்கில் சீனத் துருப்புகள் அத்துமீறி, தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில், ஆத்திரமூட்டும் வகையில் நடமாட்டங்களைக் மேற்கொண்டுள்ளன. இந்தியப் படையினர், பாங்காங் ட்சோ ஏரியின் தெற்குக் கரையில் , சீனத்துருப்புகளின் இந்த நடவடிக்கையை முன்கூட்டியே அறிந்து, நமது நிலையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. கள நிலையில், ஒருதலைப் பட்சமாக மாற்றம் ஏற்படுத்தும் சீனாவின் நோக்கம் இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவம், பேச்சு வார்த்தை மூலம் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளது. அதே சமயம், நமது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும்  அதே அளவில் உறுதி பூண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரிகேட் கமாண்டர் அளவிலான கூட்டம் சுஷுல் என்னுமிடத்தில் நடைபெற்று வருகிறது.

*****

 


(रिलीज़ आईडी: 1650040) आगंतुक पटल : 435
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Odia , Telugu