ஜல்சக்தி அமைச்சகம்

ஜல் ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவதற்காக மத்திய ஜல்சக்தி அமைச்சர் அருணாச்சலப்பிரதேச முதல்வருடன் கலந்துரையாடினார்

प्रविष्टि तिथि: 31 AUG 2020 3:47PM by PIB Chennai

மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், அருணாச்சலப்பிரதேச முதல்வர் திரு.பேமா கந்துரேகார்ட்டுடன் ஜல்ஜீவன் இயக்கத்தை மாநிலத்தில் செயல்படுத்துவது குறித்து இன்று காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார். கோவிட்டுக்கு சிகிச்சை பெற்று வருவதால் திரு. ஷெகாவத் மருத்துவமனையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்க, அந்தக் கூட்டத்தில் ஜல்சக்தி மாநில அமைச்சர் திரு. ரத்தன் லால் கட்டாரியாவும் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் கூடுதல் செயலாளர் மற்றும் இயக்கத்தின் திட்ட இயக்குநர் மற்றும் அமைச்சகத்தின் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து, பொது சுகாதார பொறியியல் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும், 2023ஆம் ஆண்டளவில் 100 சதவீதக்  குழாய் இணைப்பை வழங்கும் லட்சியத்தை இலக்காகக் கொண்டு  திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், மத்திய அமைச்சர்,  மாநில முதலமைச்சரிடையே பணியின் முன்னேற்றம் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வாழ்க்கையை மாற்றும் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர், தற்போதுள்ள நீர் வழங்கல் திட்டங்களை மறுசீரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் குறித்தும் அப்போது வலியுறுத்தினார். மாநிலத்தின் 5,457 கிராமங்களில், 3,823 கிராமங்கள் குழாய் நீர் வழங்கல் திட்டங்களைக் கொண்டுள்ளன, ஆனால் 2.17 லட்சம் வீடுகளில் 43,244 (20%) மட்டுமே குழாய் இணைப்புகளைக் கொண்டுள்ளன. சமுதாயத்தின் ஏழை மற்றும் விளிம்பு நிலைப் பிரிவினருக்குச் சொந்தமான மீதமுள்ள வீடுகளில் விரைவாக குழாய் இணைப்புகளை வழங்குவதற்காக, பிரச்சாரப் பயன்முறையை மேற்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

**********


 


(रिलीज़ आईडी: 1650060) आगंतुक पटल : 313
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Telugu