நிலக்கரி அமைச்சகம்

2030 ஆம் ஆண்டுக்குள் 100 எம்.டி. அளவுக்கு நிலக்கரியில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு: பிரகலாத் ஜோஷி


எரிவாயு உற்பத்திக்கு பயன்படுத்தும் நிலக்கரி மீதான வருவாய் பகிர்வில் 20% சலுகை

நிலக்கரியில் எரிவாயு தயாரித்தல் மற்றும் திரவமாக்கல் முயற்சி குறித்து நிலக்கரி அமைச்சகம் சார்பில் இணையவழி பயிலரங்கு

Posted On: 31 AUG 2020 7:26PM by PIB Chennai

2030 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி மூலம் எரிவாயு உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி கூறினார். ரூ.4 லட்சம் கோடி மதிப்பீட்டில் இது செய்யப்படும் என அவர் தெரிவித்தார். நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரித்தல் மற்றும் திரவமாக்கல் குறித்த இணையவழிப் பயிலரங்கில் பேசிய திரு. ஜோஷி, இது ஒரு பேராசை லட்சியமாக இல்லை, ஒரு தேவையாக இருக்கிறது என்று கூறினார். தூய்மையான எரிபொருள் ஆதாரங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், எரிவாயுத் தயாரிப்புக்கு பயன்படுத்தும் நிலக்கரி மீதான வருவாய்ப் பகிர்வில் 20 சதவீதம் சலுகையை அரசு அளிப்பதாகத் தெரிவித்தார். இதனால் செயற்கை முறையில் இயற்கை எரிவாயு உற்பத்தி, ஆற்றல் தரும் எரிபொருள் உற்பத்தி, உரங்களுக்கான யூரியா மற்றும் இதர ரசாயனப் பொருள்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்று அவர் கூறினார். மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் புதுடெல்லியில் இந்த இணையவழிப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த இலக்கை அடைவதற்கான அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு, இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் நிலக்கரித் துறை சார்ந்த சுமார் 700 பேர் இதில் கலந்து கொண்டனர்.

நிலக்கரித் துறையில் பசுமை எரிசக்தி முயற்சிகளில் அரசு கொண்டுள்ள உறுதியை விளக்கிய திரு. ஜோஷி, நிலக்கரியில் இருந்து எரிவாயு தயாரித்தல் மற்றும் திரவமாக்கல் முயற்சிகள் அரசின் செயல்திட்டங்களில் உள்ளவைதான் என்று தெரிவித்தார். இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக நிதிஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர். வி.கே. சரஸ்வத் தலைமையில் ஒரு நெறிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய  நிலக்கரி நிறுவனம் தான்குனி தவிர, மேலும் 3 எரிவாயு உற்பத்தி நிலையங்களை பி.ஓ.ஓ. அடிப்படையில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. உலகளாவிய டெண்டர் முறையில் இது செயல்படுத்தப்படும். செயற்கை முறையிலான இயற்கை எரிவாயு விற்பனைக்காக கெயில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்கள் குறித்து மேலும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பயிலரங்கில் பங்கேற்றவர்களை அமைச்சர் திரு.ஜோஷி கேட்டுக் கொண்டார். நாட்டின் SWOT ஆய்வின் முடிவுகளுக்கு எற்ப இது அமைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். உலக தரநிலைகளின் படி, நீடித்த எரிசக்திப் பயன்பாட்டை நோக்கி முன்னேறுவதுடன், இயற்கைவள ஆதாரங்களை அதிகபட்ச அளவில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை செம்மைப்படுத்துவதாக இது இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர். வி.கே. சரஸ்வத், நிலக்கரித் துறை இணைச் செயலாளர் திரு. அனில்குமார் ஜெயின் ஆகியோரும் இணையவழிப் பயிலரங்கில் பேசினர். இந்திய நிலக்கரி நிறுவன. திரு பினய் தயாள்,( DT, CIL) சுரங்கம், எரிபொருள் ஆராய்ச்சி மத்திய நிறுவனத்தின் (Central Institute of Mining and Fuel Research – CIMFR) இயக்குநர் டாக்டர் பி.கே. சிங், பொது மேலாளர் (PDIL) திரு அசுட்டோஷ் பிரசாத், ண்ஹிர்வாக இயக்குநர் (JSPL) திரு. நவீன் ஜின்டால், முந்த்ரா சினர்ஜி சிஇஓ திரு. ராஜேஷ் ஜா, ஜே.எஸ்.பி.எல். நிர்வாக இயக்குநர் டாக்டர் வி.ஆர். ஷர்மா, ட்ரூ நார்த் வென்ச்சர்ஸ் பங்குதாரர் டாக்டர் தேவ் காகஸ்கர், ஏர் புராடக்ட்ஸ் நிறுவன குழுமத் துணைத் தலைவர் திரு. பாப் கார்ட்டெர் ஆகியோரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 

 

****


 



(Release ID: 1650183) Visitor Counter : 269