உள்துறை அமைச்சகம்
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா திரு. பிரணாப் முகர்ஜி காலமானதற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்
"பிரணாப் தா மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவராக இருந்தார், அவர் மிகவும் பக்தியுடன் தேசத்திற்கு சேவை செய்தார்; அவரது சிறந்த வாழ்க்கை முழுநாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விஷயம் ”
"பிரணாப் தாவின் வாழ்க்கை அவரது கறை படியாத சேவைக்காகவும், நம் தாய்நாட்டிற்கு அளித்த அழியாத பங்களிப்புக்காகவும் எப்போதும் மதிக்கப்படும். அவரது மறைவு இந்திய அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
प्रविष्टि तिथि:
31 AUG 2020 7:34PM by PIB Chennai
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா திரு.பிரணாப் முகர்ஜி காலமானதற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரு ட்வீட்டில், திரு. அமித் ஷா, "இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா திரு பிரணாப் முகர்ஜி ஜி காலமானதில் மிகுந்த வேதனையடைந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர், “அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவராக இருந்தார், அவர் மிகுந்த பக்தியுடன் தேசத்திற்கு சேவை செய்தார். பிரணாப் தாவின் சிறந்த வாழ்க்கை முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.” என்று தெரிவித்தார்.
திரு அமித் ஷா "பிரணாப் தாவின் வாழ்க்கை அவரது கறைபடியாத சேவைக்காகவும், நம் தாய்நாட்டிற்கு அளித்த அழியாத பங்களிப்புக்காகவும் எப்போதும் மதிக்கப்படும். அவரது மறைவு இந்திய அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈடுசெய்ய முடியாத இந்த இழப்புக்காக, அவரது குடும்பத்தினர் மற்றும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. ” என்று கூறியுள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1650187)
आगंतुक पटल : 307