சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ரூ 7 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

Posted On: 02 SEP 2020 6:56PM by PIB Chennai

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் இருந்து சென்னை அயல்நாட்டு தபால் நிலையத்துக்கு வந்த சந்தேகத்துக்கிடமான மூன்று தபால் பொட்டலங்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆய்வு செய்தது.

 

இங்கிலாந்தில் உள்ள நெதர்டன்னில் இருந்து ஊட்டியை சேர்ந்த நபர் ஒருவருக்கு வந்திருந்த, சிறுவர் நகை பொம்மை பெட்டி என்று குறிப்பிடப்பட்டிருந்த பெட்டியை திறந்து ஆய்வு செயத போது, 'மைபிராண்டு' என்னும் பெயருடைய 15 சாம்பல் நிற மண்டை ஓட்டு வடிவிலான MDMA என்னும் போதை மாத்திரைகளும், 7 கிராம் MDMA போதை மருந்தும் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

 

இரண்டாவது பொட்டலத்தில் இருந்து, 50 பச்சை வண்ண மற்றும் 50 ஊதா வண்ண மண்டை ஓட்டு வடிவிலான MDMA மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நெதர்லாந்தில் இருந்து நாமக்கல்லை சேர்ந்த நபர் ஒருவருக்கு இது வந்திருந்தது.

 

மூன்றாவது பொட்டலத்தில், டெஸ்லா என்னும் குறிப்புடைய 100 MDMA போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.நெதர்லாந்தில் இருந்து சென்னையை சேர்ந்த நபர் ஒருவருக்கு இது வந்திருந்தது.

 

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்களின் மொத்த மதிப்பு ரூ 7 லட்சமாகும். தேசியப் போதைப் பொருள் தடை சட்டம் 1985-இன் கீழ் இவை பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் செய்தி குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

 

***

MBS/GB

Airport.

 

 

  



(Release ID: 1650752) Visitor Counter : 174


Read this release in: English