சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19: தொடர்ந்து ஆறாவது நாளாக 60,000-க்கும் அதிகமானோர் இந்தியாவில் குணமடைந்துள்ளனர், மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் முன்னிலை

Posted On: 02 SEP 2020 4:57PM by PIB Chennai

இந்தியாவின் மொத்த கொவிட்-19 குணமடைதல்கள் இன்று 29 லட்சத்தை (29,01,908) கடந்துள்ளன.

 

கடந்த 10 லட்சம் குணமடைதல்கள் வெறும் 17 நாட்களில் நடந்துள்ளன. இதற்கு முந்தைய 10 லட்சம் குணமடைதல்கள் 22 நாட்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் குணமடைதல் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாகும். நாட்டின் 30 சதவீத குணமடைதல்கள் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே நடந்துள்ளன.

 

ஜூலை முதல் வாரத்தில் இருந்து ஆகஸ்டு கடைசி வாரம் வரை குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கையை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் கடந்த ஆறு
 நாட்களாக தினமும் 60,000-க்கும் அதிகமான நபர்கள் கொவிட்-19-இல் இருந்து குணமடைந்து வருகின்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650654
  

                                               ***



(Release ID: 1650774) Visitor Counter : 181