ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பெங்களூருவில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கான தேசிய பயிற்சி மையத்துக்கு மின்-அடிக்கல் நாட்டப்பட்டது

Posted On: 03 SEP 2020 12:04PM by PIB Chennai

தேசிய ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (NAR) புதிய பயிற்சி நிலைய கட்டிடத்துக்கான மின்-அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது.

நாடு முழுவதும் உள்ள 566 மாவட்டங்களில் அமைந்துள்ள 585 ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் பணியாளர்களுக்கும், மாநில/ யூனியன் பிரதேசங்களின் ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கும், தொடர்புடைய வங்கி அலுவலர்களுக்கும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பாக பயிற்சி மற்றும் திறன் வளர்த்தலை NAR வழங்குகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடிய திரு நாகேந்திர நாத் சின்ஹா, செயலாளர், ஊரக வளர்ச்சி, இந்திய அரசு, ஊரக ஏழ்மையை போக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் வங்கிகள் இணைந்து பணியாற்றும் பிரத்யேக முயற்சி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் என்றார்.

நாட்டில் உள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை களைவதில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும், ரூ 25 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள பயிற்சி நிலைய கட்டிடம் திறன் வளர்த்தலை பெரிய அளவில் ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும் : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1650919

 

***



(Release ID: 1650928) Visitor Counter : 205