நிதி அமைச்சகம்

கடன் கணக்குகளுக்கான தீர்வுகளை துரிதப்படுத்துவது குறித்தும், அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும் வங்கிகளுடன் நிதி அமைச்சர் ஆலோசனை நடத்தினார்

Posted On: 03 SEP 2020 3:46PM by PIB Chennai

வங்கிக் கடன்களின் மீதான கொவிட்-19 சார்ந்த அழுத்தத்தை போக்குவதற்கான தீர்வுக் கட்டமைப்பை செயல்படுத்துவது குறித்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்

 

கடன் தடை காலம் முடிவடைந்தவுடன், கடன் வாங்கியவர்களுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டுமென்றும், அவர்களின் கடன் தகுதியை கொவிட்-19 சார்ந்த சிக்கல்களைக் கொண்டு மதிப்பிடக்கூடாதென்றும் வங்கிகளை திருமதி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

 

பொதுமுடக்கத்தின் போது பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் மற்றும் தற்சார்பு இந்தியா சார்ந்த நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்த எடுத்த முயற்சிகளுக்காக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை நிதி அமைச்சர் பாராட்டினார்

 

நம்பகத்தன்மையின் அடிப்படையில் புத்தாக்க கட்டமைப்பை வணிகங்கள் மற்றும் வீடுகள் பெறுவதற்கான வசதியை அளித்தல், வங்கிக் கொள்கைகளை இறுதி செய்தல் மற்றும் கடன் பெறுபவர்களை கண்டறிதல் ஆகியவற்றைக் குறித்து கவனம் செலுத்திய இந்த ஆய்வுக் கூட்டம், எளிதான மற்றும் துரித செயல்படுத்துதலுக்கு தேவையான விஷயங்கள் குறித்தும் விவாதித்தது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650985

 

*********


 



(Release ID: 1651034) Visitor Counter : 237