பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இரண்டு-நாள் தேசிய பழங்குடி ஆராய்ச்சி மாநாட்டை மெய்நிகர் முறை மூலம் திரு அர்ஜுன் முண்டா தொடங்கி வைத்தார்

Posted On: 03 SEP 2020 3:51PM by PIB Chennai

பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான மானியங்களின் கீழ் 26 பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் நிதி உதவியை வழங்கியுள்ளதாக பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா கூறியுள்ளார்.

 

நாடு முழுவதுமுள்ள முன்னணி அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து தரமான ஆராய்ச்சியிலும் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் புதுதில்லியில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இந்திய பொது நிர்வாக நிறுவனத்துடன் (IIPA) இணைந்து இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் தில்லி வளாகத்தில் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் புதுதில்லியில் அமைக்கப்பட்டு வருகிறது.

 

இரண்டு-நாள் தேசிய பழங்குடி ஆராய்ச்சி மாநாட்டை மெய்நிகர் முறை மூலம் தொடங்கி வைத்த திரு அர்ஜுன் முண்டா மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார். பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்திய பொது நிர்வாக நிறுவனம் ஆகியவற்றால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650990

 

***

 

 



(Release ID: 1651064) Visitor Counter : 282