பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை லடாக் துணைநிலை ஆளுநர் ஆர் கே மாத்தூர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2020 7:34PM by PIB Chennai

மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங்கைலடாக் துணைநிலை ஆளுநர் திரு ஆர் கே மாத்தூர் இன்று சந்தித்தார்.

சந்திப்பின் போது யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி குறித்த விஷயங்களை இருவரும் விரிவாக விவாதித்தனர்.

பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசித்த டாக்டர் சிங், லடாக்குக்கும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அதிகபட்ச முன்னுரிமையை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கி இருப்பதாக கூறினார்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் முதல் முறையாக ஒரு மருத்துவக் கல்லூரியையும், ஒரு பொறியியல் கல்லூரியையும் லடாக்கில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1651104

 

***

MBS/GB


(வெளியீட்டு அடையாள எண்: 1651133) வருகையாளர் எண்ணிக்கை : 298
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Telugu