மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தொடர்கல்வி மற்றும் பாதுகாப்பை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கு ஜி-20 உறுப்பு நாடுகள் மீண்டும் உறுதி பூண்டன
Posted On:
06 SEP 2020 11:07AM by PIB Chennai
நெருக்கடி காலங்களிலும் சமமான மற்றும் தரமான கல்வியையும், வாழ்க்கை முழுவதற்குமான கற்றல் வாய்ப்புகளையும் அனைவருக்கும் உறுதி செய்வதற்காக கல்வித்துறையில் சிறந்த செயல்முறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒன்றிணைந்து பணியாற்றவும் ஜி-20 நாடுகளின் கல்வி அமைச்சர்கள் உறுதி ஏற்றனர்.
நெருக்கடி காலங்களில் தொடர்கல்வி, விரைவான குழந்தைப்பருவக் கல்வி மற்றும் கல்வியின் உலகமயம் ஆகியவற்றில் உறுப்பு நாடுகளின் அனுபவங்களை விவாதிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் ஜி20 கல்வி அமைச்சர்களின் மெய்நிகர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தியாவின் சார்பாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மேற்கண்டவை இந்திய அரசின் முன்னுரிமைத் துறைகள் என்றும் அவற்றின் மீது இந்திய அரசு தொடர்ந்து செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை-2020 நாட்டின் கல்வித் துறையில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கல்வித்துறையில் ஜி20 உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1651727
(Release ID: 1651770)