எரிசக்தி அமைச்சகம்

பீகார் மின்மயமாக்கல் திட்டங்களில் மத்திய எரிசக்தி அமைச்சகம் கடந்த 3-4 வருடங்களில் ரூ 11,000 கோடியை முதலீடு செய்துள்ளது: திரு ஆர் கே சிங்

प्रविष्टि तिथि: 12 SEP 2020 6:09PM by PIB Chennai

மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் திறன் வளர்த்தல் மற்றும் தொழில்முனைதல் இணை அமைச்சர் திரு ஆர் கே சிங், பீகாரில் என் டி பி சி உருவாக்கியுள்ள சமுகம் சார்ந்த மின்சார வசதிகளை இன்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,  பீகார் மின்மயமாக்கல் திட்டங்களில் மத்திய எரிசக்தி அமைச்சகம் கடந்த 3-4 வருடங்களில் ரூ 11,000 கோடியை முதலீடு செய்துள்ளது என்று கூறினார்.

பாட்னாவுக்கான தூரத்தை 12 கிலோமீட்டர் குறைக்கும், 3 கிமீ நீளமுள்ள மேஹ்-இந்திரபுரி சாலையையும் அவர் திறந்து வைத்தார். மேலும், 13,500 கிராமத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ 62 லட்சம் மதிப்புள்ள இரண்டு சமுதாய கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1653634
 


(रिलीज़ आईडी: 1653664) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Punjabi