விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020 மற்றும் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020, ஆகியவற்றை நாடாளுமன்றம் நிறைவேற்றியது

Posted On: 20 SEP 2020 2:13PM by PIB Chennai

நாட்டின் வேளாண் துறையை மாற்றியமைக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் இரண்டு மசோதக்களை நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியது.

விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020 மற்றும் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020, ஆகியவற்றை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

2020 செப்டம்பர் 17 அன்று மக்களவையால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள், மாநிலங்களவையால் இன்று நிறைவேற்றப்பட்டது. இது குறித்து பேசிய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், விவசாயிகளின் முழு பாதுகாப்பு இந்த சட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் தொடருமென்று மாண்புமிகு பிரதமரே உறுதியளித்துள்ளார்," என்று திரு தோமர் கூறியுள்ளார்.

இந்த சட்டங்களைப் பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய விவசாய வரலாற்றில் இது ஒரு திருப்புமுனை தருணம். நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறியதற்காக நமது கடின உழைப்பாளி விவசாயிகளுக்கு வாழ்த்துகள்.  இது விவசாயத் துறையின் முழுமையான மாற்றத்தை உறுதி செய்வதோடு கோடிக்கணக்கான  விவசாயிகளை மேம்படுத்தும்," என்று கூறினார்.

"பல தசாப்தங்களாக, இந்திய விவசாயிகள்  இடைத்தரகர்களிடம் சிக்கி கிடந்தனர்.  நாடாளுமன்றம் நிறைவேற்றிய மசோதாக்கள், விவசாயிகளை இத்தகைய துன்பங்களிலிருந்து விடுவித்து, அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும் அவர்களுக்கு அதிக செழிப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தூண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.

"நமது விவசாயத் துறைக்கு நவீன தொழில்நுட்பம் தேவை. தற்போது இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம், நமது விவசாயிகளுக்கு எதிர்கால தொழில்நுட்பம் விரைவில் கிடைக்கும். இது உற்பத்தியை அதிகரித்து, நல்ல முடிவை தரும். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. நான் முன்பே சொன்னேன், மீண்டும் சொல்கிறேன், குறைந்தபட்ச ஆதரவு விலை அமைப்பு தொடர்ந்து இருக்கும். அரசு கொள்முதல் தொடரும்," என்று அவர் உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1656929

 

*

MBS/GB


(Release ID: 1657044)