சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் ஏழாவது நீதித் துறை அமைச்சர்களின் கூட்டத்தை மத்திய சட்ட அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் 2020 அக்டோபர் 16 அன்று நடத்துகிறார்
Posted On:
12 OCT 2020 7:52PM by PIB Chennai
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் ஏழாவது நீதித் துறை அமைச்சர்களின் கூட்டம், மத்திய சட்டம் மற்றும் நீதி, தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத்தால் 2020 அக்டோபர் 16 அன்று நடத்தப்படும்.
இதுதொடர்பாக, 2020 அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், நிபுணர்கள் பணிக் குழுவின் இரண்டாவது கூட்டத்தை சட்ட விவகாரங்கள் துறையின் செயலாளர் திரு அனுப் குமார் மெண்டிரட்டா நடத்துகிறார்.
இரு கூட்டங்களுமே காணொலி காட்சி மூலம் நடத்தப்படும். சட்ட சிக்கல்களை தீர்ப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காக தாங்கள் எடுத்த நடவடிக்கைகளை கூட்டத்தின் போது நிபுணர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் ஏழாவது நீதித் துறை அமைச்சர்களின் கூட்டத்துக்கான நிபுணர்கள் குழுவின் முதல் தயார்நிலை கூட்டம் 2019 செப்டம்பர் 1, 7 மற்றும் 18 ஆகிய நாட்களில் புது தில்லியில் நடைபெற்றது.
சட்ட சிக்கல்களை சுமூகமான தீர்ப்பதற்கான சூழ்நிலைகளை அமைப்பது, தடய அறிவியல் மற்றும் சட்ட சேவைகளில் நிபுணர்களின் செயல்திட்டத்தை செயல்படுத்துவது ஆகியவற்றை குறித்து ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் ஏழாவது நீதித் துறை அமைச்சர்களின் கூட்டம் விவாதிக்கும். கூட்டத்தின் இறுதியில் கூட்டு அறிக்கை கையெழுத்திடப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663794
**********
(Release ID: 1663794)
(Release ID: 1663917)