உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

உணவு பதப்படுத்துதல் நிலையங்களை தொலை தூரப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் அரசு உறுதி: மத்திய வேளாண் அமைச்சர்

प्रविष्टि तिथि: 25 NOV 2020 7:04PM by PIB Chennai

மத்திய உணவு பதப்படுத்துதல், விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலம், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், உணவு பதப்படுத்துதல் துறையின் பங்குதாரர்களுடன் காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உணவு பதப்படுத்துதல்  நிலையங்களை நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். தொழில்துறை பிரதிநிதிகள் அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைக்கான வழிமுறைகளை வடிவமைப்பதற்கு மத்திய அமைச்சரவை, தொழில்துறை தலைவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவும், இந்தத் திட்டம் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, நாட்டில் ஏற்றுமதியை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கம் அளித்தல் ஆகிய திட்டங்களை செயல்படுத்தும் வகையில் உள்ளூர் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675752

*******************


(रिलीज़ आईडी: 1675824) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu