சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ரூ.35.5 லட்சம் மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல். ஒருவர் கைது
இடுகை இடப்பட்ட நாள்:
04 DEC 2020 7:53PM by PIB Chennai
கடந்த வியாழக்கிழமையன்று, துபாயில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ 6ஈ-66 விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த 37 வயதான திரு சையது அபுதாஹிர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 54 வயதான திரு ஜாகுபாரலி அப்துல் காதர் ஆகியோரை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அவர்களை சோதனை செய்ததில் அவர்கள் இருவரும் தலா மூன்று தங்கப் பொட்டலங்களைத் தங்கள் உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரின் உடல்களில் இருந்தும் மொத்தம் 854 கிராம் எடையுள்ள 6 தங்கப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
சுங்கச் சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து ரூ. 35.5 லட்சம் மதிப்பிலான 706 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரு அப்துல் காதர் கைது செய்யப்பட்டார்.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


------
(வெளியீட்டு அடையாள எண்: 1678414)
வருகையாளர் எண்ணிக்கை : 33