விவசாயத்துறை அமைச்சகம்
2021 ஜனவரி 22 அன்று காணொலி மூலம் நடைபெற்ற வேளாண்மை குறித்த தேசிய மாநாட்டில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா உரையாற்றினார்
Posted On:
22 JAN 2021 5:59PM by PIB Chennai
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயத் துறை திகழ்வதாக 2021 ஜனவரி 22 அன்று காணொலி மூலம் நடைபெற்ற வேளாண்மை குறித்த தேசிய மாநாட்டில் உரையாற்றிய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கூறினார்.
இத்துறைக்கு உயரிய முக்கியத்துவத்தை அரசு வழங்கி வருவதாகவும், விவசாயிகளின் வாழ்வையும், சமூக பொருளாதார நிலையையும் மேம்படுத்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
வேளாண் துறைக்கான கோடைகால பிரச்சாரம் குறித்த மாநாட்டில் மேலும் பேசிய அவர், விவசாய துறையை தன்னிறைவாக்கவும், தொழில் முனைதல் மிக்கதாக ஆக்கவும் தேவையான யுக்திகள், உற்பத்தி தொழில்நுட்பங்கள், புதிய சந்தை வாய்ப்புகள் மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மீது அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் துடிப்புமிக்க தலைமையின் கீழ் புதிய திசையை நோக்கி நாடு செல்லும் என்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் கூறினார்.
‘கூடுதல் பருவம், கூடுதல் பயிர் மற்றும் வளத்திற்காக கூடுதல் வருமானம்’ என்னும் மந்திரத்துடன் கோடைகால பயிர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே
காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691267
**********************
(Release ID: 1691375)