ரெயில்வே அமைச்சகம்
250 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை தில்லி, தெலங்கானா, உத்தரப்பிரதேசத்திற்கு நாளை காலை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் கொண்டு சேர்க்கின்றன
Posted On:
01 MAY 2021 5:59PM by PIB Chennai
நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் பணியை துரிதப்படுத்தி உள்ள இந்திய ரயில்வே, 813 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 56 டேங்கர்களில் இது வரை கொண்டு சேர்த்துள்ளது.
250 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை தில்லி, தெலங்கானா, உத்தரப்பிரதேசத்திற்கு நாளை காலை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்க்கின்றன.
தனது இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸில் 120 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜனை நாளை மாலை தில்லி பெறும். 79 டன் ஆக்சிஜனை ஹரியானா இன்று பெறுகிறது.
தேவையுள்ள மாநிலங்களுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதை இந்திய ரயில்வே லட்சியமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715386
(Release ID: 1715438)