சுற்றுலா அமைச்சகம்

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் மற்றும் ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால் கட்டார் சுற்றுலா தொடர்பான திட்டங்களின் மேம்பாடு குறித்த கூட்டத்தை நடத்தினர்

Posted On: 29 JUN 2021 5:04PM by PIB Chennai

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் மற்றும் ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால் கட்டார் சுற்றுலா தொடர்பான திட்டங்களின் மேம்பாடு குறித்த கூட்டத்தை நடத்தினர். 

புது தில்லியில் இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் ஹரியானாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் சுற்றுலா தொடர்பான திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

இந்திய அரசின் சுற்றுலா செயலாளர் திரு அரவிந்த் சிங், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் இணைச் செயலாளர்கள், மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

கிருஷ்ணா சர்க்யூட் திட்டம்-2 குறித்த தகவல்களை கூட்டத்தின் போது மாநில அரசு வழங்கியது. ஸ்ரீமத் பகவத் கீதை, மகாபாரதம் (குருச்சேத்திரம்) உள்ளிட்ட முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள் தொடர்பான உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

 மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731172
 


(Release ID: 1731281)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi