சுற்றுலா அமைச்சகம்
இந்தியாவை முழுமையான சுற்றுலா தலமாக சுற்றுலா அமைச்சகம் பறைசாற்றுகிறது: திரு ஜி கிஷன் ரெட்டி
Posted On:
26 JUL 2021 5:26PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
நாட்டில் சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக சுவதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் ஆகிய திட்டங்களின் கீழ் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/மத்திய முகமைகளுக்கு சுற்றுலா அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது.
திரியம்பகேஷ்வரின் மேம்பாட்டிற்காக பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ 37.81 கோடி நிதியுதவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா கடலோர பகுதிகள் மேம்பாட்டிற்காக பல்வேறு கடற்கரைகளை சீரமைக்கும் விதத்தில் ரூ 19.06 கோடி நிதியுதவியை 2015-16-ம் ஆண்டு அமைச்சகம் வழங்கியது. ஆன்மிகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக 2018-19-ம் ஆண்டு ரூ 54.01 கோடி வழங்கப்பட்டது.
புலிகள் சரணாலயம், தேசிய பூங்காக்கள், மலைவாச ஸ்தலங்கள், கடற்கரைகள், வனப் பகுதிகள், பாரம்பரிய இடங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் கோவில்கள் என முழுமையான ஒரு சுற்றுலா தலமாக இந்தியாவை சுற்றுலா அமைச்சகம் பறைசாற்றுகிறது. இதற்காக பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739118
-----
(Release ID: 1739261)