சுற்றுலா அமைச்சகம்
‘லடாக்: புதிய தொடக்கம், புதிய இலக்குகள்’’ : லே பகுதியில், 3 நாள் சுற்றுலா நிகழ்ச்சி நாளை தொடக்கம்
प्रविष्टि तिथि:
25 AUG 2021 12:28PM by PIB Chennai
‘லடாக்: புதிய தொடக்கம், புதிய இலக்குகள்’’ என்ற தலைப்பில்: 3 நாள் பிரம்மாண்ட சுற்றுலா நிகழ்ச்சி லே பகுதியில் நாளை தொடங்குகிறது.
லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் திரு ராதா கிருஷ்ண மாத்தூர் மற்றும் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உரையாற்றுகின்றனர்.
‘‘புதிய தொடக்கம், புதிய இலக்குகள்’’ என்ற சுற்றுலா நிகழ்ச்சி லே பகுதியில் 2021 ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், ‘‘லடாக் பகுதிக்கான, சுற்றுலா தொலைநோக்கு’’ குறித்த ஆவணம் வெளியிடப்படும்.
இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், லடாக் சுற்றுலாத்துறையுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. லடாக் பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748804
-----
(रिलीज़ आईडी: 1749002)
आगंतुक पटल : 236