பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்வாமித்வா திட்டத்தின் தேசிய கூட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2021 6:01PM by PIB Chennai

ஊரக பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஸ்வாமித்வா திட்டத்தின் தேசிய கூட்டத்தை, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங், நாளை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். 

இதில் பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு கபில் மொரேஸ்வர் பாட்டீல், மத்திய ஊரக வளர்ச்சி துறை இணையமைச்சர்கள் திரு ஃபகன் சிங் குலாஸ்தே மற்றும் சுஷ்ரி சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளின் பிரதிநிதிகள், இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் இதில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்வாமித்வா திட்டத்தை, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 2021 ஏப்ரல் 24ம் தேதி பிரதமர் தொடங்கிவைத்தார். அதன்பிறகு ஸ்வாமித்வா திட்டத்தின் தேசியளவிலான கூட்டம் முக்கியத்தும் பெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754573

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1754617) வருகையாளர் எண்ணிக்கை : 313
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu