சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தென்பிராந்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்கள் மாநாடு – பெங்களூரில் நாளை தொடக்கம்: மத்திய அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி, கர்நாடக முதல்வர் திரு.பசவராஜ் பொம்மை உரையாற்றுகின்றனர்

प्रविष्टि तिथि: 27 OCT 2021 2:10PM by PIB Chennai

தென்பிராந்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்கள் மாநாட்டை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் பெங்களூரில் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. இதில் மத்திய அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி, கர்நாடக முதல்வர் திரு.பசவராஜ் பொம்மை ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் சுற்றுலாத்துறை, கப்பல் போக்குவரத்துத்துறை, ரயில்வே, சுற்றுச்சூழல், வனத்துறை, தொல்பொருள் ஆய்வுத்துறை ஆகிய அமைச்சகங்கள் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை தங்கள் திட்டங்களை தெரிவிக்கின்றன.  

சுற்றுலாத்துறை குறித்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் திட்டங்களை தெரிவிக்கின்றன. சுற்றுலாத் துறையின் மேம்பாடு, திறமையானவர்களை உருவாக்குதல் போன்றவற்றில் சுற்றுலாத்துறை அமைச்சகம் கவனம் செலுத்துகிறது. கடந்த சில மாதங்களாக உள்நாட்டு சுற்றுலாவில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் சுற்றுலாப்பயணிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766871

***


(रिलीज़ आईडी: 1766890) आगंतुक पटल : 269
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu , Kannada