சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ரூ.40.55 லட்சம் மதிப்புள்ள 880 கிராம் தங்கம் பறிமுதல்

Posted On: 02 MAR 2022 6:19PM by PIB Chennai

சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து விமானம் மூலம் கடந்த 28-ம் தேதி சென்னை வந்த சக்தி ஜெயகிருஷ்ணன் என்ற பெண் பயணியை இடைமறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது உள்ளாடைக்குள் மறைத்து எடுத்த வந்த 880 கிராம் எடை கொண்ட தங்கம் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.40.55 லட்சமாகும். இது தொடர்பாக பெண் பயணியும், அவரை வரவேற்பதற்காக வெளியில் காத்திருந்த நாகூர்கனி என்ற நபரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

****


(Release ID: 1802381)