பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15வது சுற்று சீன-இந்திய கார்ப்ஸ் படைப்பிரிவுத் தளபதிகள் நிலை கூட்டத்தின் கூட்டுச் செய்தி வெளியீடு

प्रविष्टि तिथि: 12 MAR 2022 6:16PM by PIB Chennai

15வது சுற்று சீன-இந்திய கார்ப்ஸ் படைப்பிரிவுத் தளபதிகள் நிலைக்  கூட்டம் 11 மார்ச் 2022 அன்று இந்தியப் பகுதியில்  உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் நடைபெற்றது. இரு தரப்பும் 2022 ஜனவரி 12 அன்று நடைபெற்ற முந்தைய சுற்றில் இருந்து தொடர்புடைய தீர்வுக்காக தங்கள் விவாதங்களை முன்னெடுத்தன. மேற்குத் துறைப் பகுதியில்  LAC எனப்படும் உண்மையான கட்டுப் பாட்டுக் கோடு தொடர்பான சிக்கல்கள்எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு தத்தமது அரசுத் தலைவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி அவர்கள்  விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

அத்தகைய தீர்வு  மேற்குத் துறையில் எல்ஏசியில் அமைதி மற்றும் அமைதியை மீட்டெடுக்க உதவும் என்றும் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை எளிதாக்கும் என்றும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேற்குத் துறையில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை தற்காலிகமாகப்  பராமரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு இராணுவ மற்றும் இராஜதந்திர வழிகளில் உரையாடலைத் தொடர அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

                                                                                                *******************


(रिलीज़ आईडी: 1805383) आगंतुक पटल : 305
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi