பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவின் கீழ் பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் சிறப்பு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஐஐசிஏ ஏற்பாடு செய்துள்ள "இஎஸ்ஜி - சிஎஸ்ஜி சிறந்த நடைமுறைகள் குறித்த கண்காட்சியை" திரு ராவ் இந்தர்ஜித் சிங் நாளை தொடங்கிவைப்பார்
प्रविष्टि तिथि:
11 JUN 2022 1:57PM by PIB Chennai
சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவின் கீழ் பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் சிறப்பு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பெருநிறுவன விவகாரங்களுக்கான இந்தியக் கல்வி நிறுவனம் (ஐஐசிஏ) இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள், குடிமக்களின் புகழ்மிக்க வரலாறு, அதன் பன்முகக் கலாச்சாரங்கள், பல முக்கிய சாதனைகளை நினைவுகூர பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கொண்டாட்டங்களில் பெருநிறுவனங்கள் விவகாரத் துறை இணை அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் தலைமை விருந்தினராக கலந்துகொள்வார். பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் வர்மா தலைமை தாங்குவார்.
நிதி ஆயோக், பொது நிறுவனங்கள் துறை, யுனிசெஃப் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக "இஎஸ்ஜி - சிஎஸ்ஜி சிறந்த நடைமுறைகள் குறித்த கண்காட்சிக்கு" ஐஐசிஏ ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833139
**************
(रिलीज़ आईडी: 1833161)
आगंतुक पटल : 297