சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் கீழ் ஹேக்கத்தான் போட்டிக்கு தேசிய சுகாதார ஆணையம் ஏற்பாடு
प्रविष्टि तिथि:
25 JUN 2022 4:32PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடர்பாக பல்வேறு தரப்பினரின் சிந்தனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் வகையில், அனைத்து தரப்பினரும் பங்கேற்கக்கூடிய முதலாவது ஹேக்கத்தான் போட்டியை தேசிய சுகாதார ஆணையம் போட்டியை நடத்தவுள்ளது. இந்த ஹேக்கத்தான் போட்டி, ‘சுற்று-1: ஒன்றிணைக்கப்பட்ட சுகாதார இடைமுகம்’ நிகழ்ச்சியுடன் தொடங்கி ஜூலை 14 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இந்த ஹேக்கத்தான் ஒன்றிணைக்கப்பட்ட சுகாதார இடைமுகம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்துவதுடன், இந்தியாவில் உள்ள சுகாதாரத்துறை ஸ்டார்டப்களை ஓரணியில் திரட்டுவதோடு, புதிய தீர்வுகளை உருவாக்கும் விதமாக தனிநபர் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் நடத்தப்படவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836955
***************
(रिलीज़ आईडी: 1836964)
आगंतुक पटल : 280