சுற்றுலா அமைச்சகம்
மக்களை ஒற்றுமைப்படுத்துவதில் அமிர்தப்பெருவிழாவும், இல்லம் தோறும் மூவண்ணக்கொடி இயக்கமும் முக்கியத்துவம் பெற்றதை பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் பங்கேற்ற மனதின் குரல் நிகழ்வில் எடுத்துரைத்தார்
प्रविष्टि तिथि:
06 SEP 2022 12:30PM by PIB Chennai
2022 ஆகஸ்ட் 28 அன்று மனதின் குரல் நிகழ்வின் 92-வது உரையின் போது அமிர்தப்பெருவிழாவும், இல்லம் தோறும் மூவண்ணக்கொடி இயக்கமும் மக்களை ஒன்றுப்படுத்துவது ஒருங்கிணைந்து பணியாற்றியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார். இந்த இயக்கங்கள் ஒரே இந்தியா உன்னத இந்தியா உணர்வின் பிரதிபலிப்பாகும்.
மூவண்ணக் கொடியை ஏற்றும் போது இதே உணர்வை அனைவரிடமும் காணமுடிந்தது. தூய்மை இயக்கம், தடுப்பூசி இயக்கம் ஆகியவற்றிலும் நாட்டில் இதே உணர்வை நாம் பார்த்தோம். நமது ராணுவ வீரர்கள், உயரமான மலைகளின் சிகரங்களில், நாட்டின் எல்லைகளில், கடலின் நடுவே மூவண்ணக் கொடியை ஏற்றினார்கள்.
அமிர்தப்பெருவிழாவின் போது மூவண்ணக் கொடிகள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் ஏற்றப்பட்டதாக பிரதமர் மேலும் கூறினார். போட்ஸ்வானாவின் உள்ளூர் பாடகர்கள் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட 75 தேசபக்த பாடல்களை பாடினார்கள். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, அசாமி, தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் இந்தப் பாடல்கள் பாடப்பட்டன என்பதாகும். இதே போல், நமீபியாவில் இந்தியா - நமீபியா இடையேயான கலாச்சார, பாரம்பரிய உறவுகளை குறிக்கும் வகையில், சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.
விடுதலைப் போராட்ட வீரர்களின் குறிப்பாக போற்றப்படாத நாயகர்களின் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் ஸ்வராஜ் தொடரை தூர்தர்ஷனில் கண்டு களிக்குமாறு பொது மக்களை பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857052
**************
(रिलीज़ आईडी: 1857084)
आगंतुक पटल : 224