சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பு

Posted On: 03 AUG 2022 3:50PM by PIB Chennai

இந்திய அரசியல்சாசனத்தின் 7-வது அட்டவணைப்படி, பொது நிலைத்தன்மை, காவல் பணி ஆகியவை மாநில அரசுகளின் பணியாக உள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து குடிமக்களுக்கும் எதிரான குற்றங்களை பதிவுசெய்வது மற்றும் தண்டனை பெற்றுத்தருவது ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பாக உள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மாநிலங்களுக்கு உதவும் வகையில், மத்திய ஆயுத காவல் படைகள் பணியமர்த்தப்படுகின்றன. சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இதையொட்டி, சமூக வன்முறை ஏற்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கான நிலையான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பெற்ற புகார்களின் விவரங்களை இணைப்பில் பார்க்கலாம்.

எப்போதெல்லாம், தேசிய சிறுபான்மையினர் ஆணையம் புகார்களைப் பெறுகிறதோ, அப்போது, உரிய அதிகார வட்டாரங்களிடம் அறிக்கைகள் கேட்கப்படுகின்றன. சில சமயங்களில், அறிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாவிட்டால், பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் தேசிய சிறுபான்மையினர் ஆணையம் விசாரணை நடத்துகிறது. மேலும், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில், சிறுபான்மையினர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அறிக்கைகளை கேட்கும்.

இணைப்பு

வ.எண்

ஆண்டு

புகார்கள்

1

2017-18

09

2

2018-19

09

3

2019-20

02

4

2020-21

04

5

2021-22

08

 

இந்தத் தகவல்களை, மாநிலங்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி சுபின் இரானி, இன்று எழுத்து மூலம் அளித்துள்ளார்.

*****


(Release ID: 1866830) Visitor Counter : 186
Read this release in: English , Urdu