உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்எஃப்டிஐ-யின் செயல்பாடுகள்

प्रविष्टि तिथि: 20 DEC 2022 1:55PM by PIB Chennai

மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் நாட்டில் 2 தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை ஹரியானாவில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பத் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனமும், தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பத் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஆகும். இவ்விரு நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்கள் உணவுப் பதப்படுத்தும் துறையில் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

 பதிவு செய்யப்பட்ட உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் 2017-18-ம் நிதியாண்டில் 2,26,675 பேரும், 2018-19-ம் நிதியாண்டில் 1,97,080 பேரும், 2019-20-ம் நிதியாண்டில் 2,06,923 பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உணவுப் பதப்படுத்தும் துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் இதனைத் தெரிவித்துள்ளார்.

**************

AP/ES/AG/KRS


(रिलीज़ आईडी: 1885064) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu