தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஜி20-ன் முதலாவது வேலைவாய்ப்புப் பணிக்குழுக்கூட்டம் ஜோத்பூரில் நடைபெற்று வருகிறது
Posted On:
02 FEB 2023 5:21PM by PIB Chennai
ஜி20 இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், முதலாவது வேலைவாய்ப்பு பணிக்குழுக்கூட்டம் 2023, பிப்ரவரி 2 முதல் 4ம் தேதி வரை ஜோத்பூரில் நடைபெறுகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தலைமையில் நடைபெற்று வரும் விவாதத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்பு, சமூக விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய திறன் மற்றும் தகுதிகளுக்கான உத்திகளை கண்டறிதல் மற்றும் பொதுவான திறன் வகைகளுக்கான கட்டமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் குழு விவாதம் இன்று நடைபெற்றது. உலகளாவிய திறன் இடைவெளிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக தங்களது கருத்துக்களை உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர்.
ஜி 20 நாடுகள், விருந்தினர் நாடுகள்,சர்வதேச மற்றும் தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இதர சர்வதேச, தேசிய அளவிலான முக்கிய நிபுணர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். மத்திய மாநில அரசு முகமைகளின் அதிகாரிகள், தொழில்துறை, கல்வித்துறை பிரதிநிதிகள் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
திறன் மற்றும் சான்றளிப்பதில் பரஸ்பர அங்கீகாரம் மற்றும் திறன் தொடர்பாக சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து குழுவினர் வலியுறுத்தினார்கள்.
----
AP/IR/RS/RJ
(Release ID: 1895805)