நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஓய்வுதிய திட்டங்களின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 22.88% உயர்வு

प्रविष्टि तिथि: 10 MAR 2023 1:02PM by PIB Chennai

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் இயங்கும் பல்வேறு திட்டங்களில் இணைந்திருக்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் 4, 2023 அன்று 624.81 லட்சமாக இருந்தது. இது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தின் 508.47 லட்சம் என்ற எண்ணிக்கையை விட, 22.88% அதிகமாகும்.

நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த ஓய்வூதிய சொத்துக்கள், மார்ச் 4, 2023 அன்று ரூ. 8.82 லட்சம் கோடியாக பதிவானது. இது கடந்தாண்டின் இதே காலகட்டத்தை விட 23.45% கூடுதலாகும்.

 

----

AP/RB/KPG


(रिलीज़ आईडी: 1905544) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu